வசீம் தாஜூதீன் படுகொலை – புதிய தகவல் விரைவில் – பிரதி அமைச்சர் அருண்!

“ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனத்தை வசீம் தாஜூதின் கொலைச் சம்பவத்துக்க உபயோகப்படுத்தியுள்ளமை தொடர்பிவும் தகவல்கள் கிடைக்கின்றன. எனவே தேவைப்படும் முழுமையான தகவல்கள் விரைவில் கிடைக்கும்” என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டுக்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், […]

ஹங்கம இரட்டைக்கொலை – இன்று வெளியான பரபரப்புத் தகவல்கள்!

ஹங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 28 வயதான பசிந்து ஹெஷான் அல்லது போ பசிந்து என்பவரும் பெண் 26 வயதான திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இக் கொலை […]

தோனிக்கு ட்ரோன் பைலட் உரிமம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் மகேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக ட்ரோன் பைலட் உரிமம் பெற்று அசத்தியுள்ளார். தோனி தனது சமூக வலைதள பதிவில் இதை அறிவித்துள்ளார். சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் தோனி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடரும் ஆவார். கருடா ஏரோஸ்பேஸ், உற்பத்தி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிற்குமே DGCA […]

அச்சுறுத்தல்களால் என்னை அமைதியாக்க முடியாது – கம்மன்பில கர்ஜனை!

அரசாங்கத்தின் மோசடிச் செயற்பாடுகளின் பிரதிபலனாகவே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தான் உறுதியாக நம்புவதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். தனது வெளிப்படுத்தல்களுக்கான முயற்சிகளை எந்தவொரு அச்சுறுத்தலாலும் தடுத்து நிறுத்தி வைக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி […]

மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி ட்ரம்ப் – மார்க் கார்னி தெரிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே ஓவல் அலுவலகத்தில்  பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் ட்ரம்ப், மார்க் கார்னி ஆகிய இருவரும் உறவை வலுப்படுத்துவது, அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம் மற்றும் இஸ்ரேல்-காஸா மோதல் என பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் மார்க் கார்னி கூறுகையில், மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி ட்ரம்ப். மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்ட ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சியை நாங்கள் ஆதரிப்போம். அதற்காக நாங்கள் எங்களால் […]

இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம் அகற்​றப்​படும். ஹமாஸ் குழு​வின் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் […]

அடுத்த வருடத்திலிருந்து வடக்கில் வாழை இலை கலாச்சாரம்!

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்னர், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை […]

இலங்கை நிதி நிலைமை, உலக வங்கியின் தலைவருடன் உரையாடல்!

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி வரும் நிலையில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் சம்பளத் திட்டம் மிகக் குறைவாகவும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மிதிப்பீடு ஒன்றை செய்து ஊழியர் எண்ணிக்கையை குறைத்தால் வினைத்திறன் அதிகரிக்கும் எனவும் உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சாக்ஸி (Kevork Sarkisian) சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் உள்ள கெவோர்க் சாக்ஸியன் தலைமையிலான குழுவினர் அரச நிதி பற்றிய […]

வடக்கு பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ் நியமனம்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (திட்டமிடல்) திருமதி ராஜினி ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் நேற்று (07)  வழங்கி வைத்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

மின்சார கட்டண திருத்தம் – நாளை விசேட கலந்துரையாடல்!

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (The Public Utilities Commission of Sri Lanka – PUCSL), 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்து நாளை எட்டாம் திகதி புதன்கிழமை கலந்துரையாடவுள்ளது. இந்த அமர்வில் பலர் கருத்து வெளியிடவுள்ளனர். குறிப்பாக மின்சார பவானையாளர் சங்கப் பிரதிநிதிகள் கருத்துரை வழங்கவுள்ளனர். “மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் 2025” என்ற தலைப்பிலான இந்த அமர்வு கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இல் காலை […]