2ஆவது ஆப்பிரிக்க நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி!

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும். போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, […]

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக தனது ஜெர்சியை அனுப்பிய மெஸ்ஸி!

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார். நாளை பிரதமர் […]

கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் ரொனால்டோ!

போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது. சவுதி கிளப் அல்-நாஸ்ருடனான அவரது லாபகரமான ஒப்பந்தம், நைக் மற்றும் ஆர்மானி போன்ற பிராண்டுகளுடனான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிற வணிக முயற்சிகளால் இத்தகைய பெருமையை அவர் அடைந்துள்ளார். இந்த விஷயத்தில் அவர் லயோனல் மெஸ்ஸி […]

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. அணியில் மிட்​செல் ஸ்டார்க்!

மெல்பர்ன்: இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாதத்​தின் 3-வது வாரத்​தில் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்டி மற்​றும் 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் ஆட்​டங்​கள் வரும் 19, 23, 25-ம் தேதி​களில் பெர்த், அடிலெய்​டு, சிட்னி ஆகிய நகரங்​களில் நடை​பெறுகிறது. ஐந்து டி20 போட்​டிகள் அக்​டோபர் 29 (கான்​பெர்​ரா), அக்​டோபர் 31 (மெல்​பர்ன்), நவம்​பர் 2 (ஹோ​பார்ட்), நவம்​பர் 6 (கோல்ட் கோஸ்ட்) மற்​றும் நவம்​பர் 8 […]

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்!

கிறிஸ் வோக்ஸ் பந்தை பாதத்தில் வாங்கி கடும் காயத்திற்கு ஆளான ரிஷப் பண்ட் இப்போது தனது கடைசி கட்ட மறுசிகிச்சைக் கட்டத்தில் இருக்கிறார். இந்த வார இறுதியில் உடற்தகுதி மதிப்பீட்டாய்விற்குத் தயாராக இருக்கிறார். இதனையடுத்து 2025-26 ரஞ்சி டிராபி சீசனின் 2வது பாதியில் ரிஷப் பண்ட் ஆடுகிறார். இது அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது. அதாவது நவம்பர் 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புமாறு அவர் […]

மியன்மாரில் புத்த திருவிழாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ; 24 பேர் பலி!

மியன்மாரில் புத்த திருவிழாவின்போது, இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மியன்மாரில் தாடிங்யுட் என்ற புத்த திருவிழாவிற்காக தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விழாவை கொண்டாட ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது பாராகிளைடர் மூலம் இயக்கப்படும் வெடிக்குண்டுகள் அந்த கூட்டத்தில் வீசப்பட்டதில், குண்டு வெடித்து 24 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து நீண்ட காலமாக இராணுவ ஆட்சி நடந்து […]

பிரான்ஸில் அரசியல் பூகம்பம்; அதிபர் மேக்ரான் பதவி விலக கடும் அழுத்தம்!

பிரான்ஸ், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் அரசியல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) மீது, தன் அரசியல் சகாக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எனப் பல தரப்பிலிருந்தும் கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுவதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், பிரான்ஸில் ஐந்து பிரதமர்கள் மாறி உள்ளனர். அதிபரின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் கூட, பதவியேற்ற 14 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மேக்ரான் […]

ஸ்பெய்னில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு!

ஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரின் உடல்கள் புதன்கிழமை (08) அதிகாலை கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக மாட்ரிட்டின் அவசர சேவைகள் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. பெயினின் செய்திச் சேவையின் தகவலின்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மாலி, கினியா மற்றும் எக்குவாடோர் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர். அனர்த்தத்தில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் கால் […]

பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கனிஸ்தான் எல்லை அருகே, கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஓராக்காய் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். 39 வயது லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப் தலைமையில் சென்ற ராணுவத்தினர், தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே […]

ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்!

ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் 63-வது படைப்பிரிவு, அதன் டெலிகிராம் சேனலில், குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்தியர் ஒருவரின் வீடியோவை வெளியிட்டது. ஆனால், இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து உக்ரைன் […]