இமாச்சல பிரதேச நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு!
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் மண்ணில் புதைந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடந்த சில மாதங்களில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் கனமழை காரணமாக நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற பேருந்து நிலச்சரிவில் சிக்கியது. தகவல் அறிந்து போலீஸார் மற்றும் தீயணைப்புப் படை, மாநில […]
காசாவில் நிலவளத்தை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும்: ஐ.நா. மதிப்பீடு!
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80 சதவீத கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன . போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற […]
தென்கிழக்கு ஆசியாவுடனான உறவை வலுப்படுத்துகிறது ஆஸ்திரேலியா: சிங்கப்பூர் முழு ஆதரவு!
தென்கிழக்கு ஆசியாவுடன் தனது உறவை வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவளிக்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் உறுதியளித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் கன்பராவில் ஆஸ்திரேலிய பிரதமருடன் இணைந்து நடந்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார். “ஆஸ்திரேலியாவும் சிங்கப்பூரும் தமது எதிர்காலப் பாதுகாப்பும் செழிப்பும் ஆசியாவில் உள்ளது என்பதை அங்கீகரிக்கின்றன. அதாவது, நமது பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வடிவமைக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” எனவும் சிங்கப்பூர் பிரதமர் அழைப்பு விடுத்தார். […]
நான் உங்களுக்காக சிவப்பு நிறத்தில் டைய் அணிந்து உள்ளேன் – ட்ரம்பிடம் கூறிய கார்னி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவிற்கு ட்ரம்பின் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் மார்க் கார்னி சென்று இருந்தார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்தபோது கனடா பிரதமர் மார்க் கார்னியை கை குலுக்கி டிரம்ப் வரவேற்றார். அப்போது கனடா பிரதமர் டிரம்ப் இடம் நகைச்சுவையைச் செய்தார். ” நான் உங்களுக்காக சிவப்பு நிறத்தில் டைய் அணிந்து உள்ளேன்” என […]
டிச.5-ம் தேதி வெளியாகிறது கார்த்தியின் ‘வா வாத்தியார்’
கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வந்த படம் ‘வா வாத்தியார்’. நீண்ட நாட்களாக இப்படம் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உல்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ […]
‘பாகுபலி: தி எபிக்’ படத்தில் சில ஆச்சரியங்கள்: தயாரிப்பாளர் விவரிப்பு!
‘பாகுபலி: தி எபிக்’ படத்தில் இருக்கும் ஆச்சரியங்கள் குறித்து மறைமுகமாக பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் ஷோபு. ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களை ஒன்றாக இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் பணிகள் ராஜமவுலி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. இதன் முடிவில் ‘பாகுபலி 3’ படத்துக்கான அறிவிப்பு இருக்கும் என்று தகவல்கள் பரவின. இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷோபு பேட்டியில் விளக்கமளித்துள்ளார். ‘பாகுபலி 3’ தொடர்பாக தயாரிப்பாளர் ஷோபு, […]
IT ஊழியர் கடத்தப்பட்ட வழக்கு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இந்தநிலையில் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு தனது தோழி உள்பட 3 பேருடன் கடந்த 24-ந்தேதி இரவு லட்சுமி மேனன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு மது அருந்த வந்திருந்த ஆலுவா பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், […]
வசூல் சாதனையில் கலக்கும் ‘லோகா’
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. இப்படத்தை […]
தனுஷூக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்னேஷ்!
தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பு 1991- 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் பெரிய சாம்ராஜ்யத்தையும் வணிகத்தில் கட்டமைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘இட்லி கடை’ புரோமோஷன் நிகழ்ச்சியின்போது இசைஞானி இளையராஜாவின் ‘சின்னத்தாயி’ படத்தில் இருந்து ‘நான் ஏரிக்கரை…’ பாடலை நினைவு கூர்ந்திருந்தார் நடிகர் தனுஷ். காலத்தால் என்றும் அழியாத மெலோடி பாடலாக நிலைத்திருக்கும் அது இப்போதும் இசை ரசிகர்கள் மத்தியிலும் பல மியூசிக் ரியாலிட்டி […]
கவின் – நயன் நடிப்பில் “HI”
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். கவின் விஜய் டி.வியில் புகழ்பெற்ற ‘கனா காணும் காலங்கள்’ சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. பின்னர், கவின் ‘நட்புனா என்ன தெரியுமா’படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் […]