கனடாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் மோசமான செயல்!

கனடாவின் வான்கூவார் மாநகரப் பகுதியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியை பள்ளி வளாகத்தில் புகைபிடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். ஆசிரியை, தனது குழந்தைகள் வகுப்பறைக்கு அடுத்துள்ள கழிப்பறையில் பலமுறை புகைப்பிடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஸ்டெஃபனி காஸ்டோரிஸ் (Stephanie Kastoris) என்ற ஆசிரியை தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி குறித்த ஆசிரியை ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளார். அந்த ஒப்பந்தத்தின் […]

கனடாவில் முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!

கனடாவின் மனிடோபா மாகாணத்தின் முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. மனிடோபாவின் முன்னாள் முதல்வர் ஹெதர் ஸ்டெஃபன்சனுக்கு 18,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாகாண நெறிமுறை ஆணையர் ஜெஃப்ரி ஸ்னூர் (Jeffrey Schnoor) வழங்கிய அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மற்றும் தண்டனைகளை அங்கீகரித்துள்ளனர். அறிக்கையில், 2023 தேர்தலில் பிரோகிரசிவ் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்தபின், புதிய என்.டி.பி. அரசு பதவியேற்கும்முன், ஸ்டெஃபன்சன் ஒரு சுரங்கத் திட்டத்துக்கு அனுமதி பெற முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை […]

கனேடியர்கள் இருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஜாமீன்!

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் ஒரு தாயும் மகளும் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தொன்றை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில், சமீபத்தில் கனடாவில் கால்வைத்த அவரை பொலிசார் கைது செய்தார்கள். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் திகதி, மனித்தோபா மாகாணத்திலுள்ள Altona என்னுமிடத்தில் சிக்னலில் நிற்காமல் சென்ற ட்ரக் ஒன்று கார் ஒன்றின் மீது மோதியது. அந்த விபத்தில், காரில் பயணித்த சாரா (Sara Unger, 35) என்னும் பெண் சம்பவ இடத்திலேயே […]

விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை!

வடமேற்கு பிரதேசத்தில் உள்ள யெல்லோநைஃப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சர்வதேச விமானத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கனடாவின் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை KLM601 என்ற விமானம், ஒரு பயணி சலனமற்றிருந்த நிலையில் யெல்லோநைஃப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. 34 வயதான குறித்த பெண் பயணி மருத்துவமனையில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவரது அடையாளம் மற்றும் மரணத்தின் காரணம் குறித்து இதுவரை விவரங்கள் வெளியிடப்படவில்லை. KLM601 விமானம் நெதர்லாந்தின் […]

ஐரோப்பிய ஒன்றிய தூதுவரைச் சந்தித்து கலந்துரையாடினார் சஜித்!

போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல், தற்போதைய அரசாங்கம் SVAT முறையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்கள் (MSMEs) எதிர்கொள்ளும் பல சவால்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மேதகு கார்மென் மொரேனோ அவர்களை இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவிற்கு மொரேனோ அவர்கள் தலைமை தாங்கியதோடு, இலங்கைக்கான ஐரோப்பிய […]

இறுதிப்போர் குறித்து மஹிந்த, பொன்சேகா கடும் சொற்போர்!

” போர் முடியப்போகின்றது என்பது முன்கூட்டியே தெரிந்திருக்குமானால் எதற்காக ஆயுதம் வாங்க பொன்சேகா இறுதிநேரத்தில் சீனா சென்றார்? இது பற்றி அவர் தெளிவுபடுத்த வேண்டும். பொன்சேகாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளால் ஏன் பயணத்தடை விதிக்கப்படவில்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ” இறுதிப்போரை முடிப்பதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவால் போர் […]

“மலையகம் மகிழ்ச்சி” : காணி, வீட்டுரிமை வழங்க ஏற்பாடு: 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு!

மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக 2 ஆயிரம் வீட்டு அலகுகளுக்குரிய உரிமைப் பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் நடைபெறும். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வெளியிட்டார். ‘ அழகான இல்லம், ஆரோக்கியமான வாழ்க்கை […]

ஹெரோயினுடன் யாழில் இளைஞன் கைது: வாள்களும் மீட்பு!

யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் 24 வயதான குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குறித்த சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே சில குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்குகள் […]

இலங்கைமீதான சர்வதேச அழுத்தம் குறையும் சாத்தியம்!

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை மீதான சர்வதேசத்தின் வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரித்தானியா தலைமையில் இலங்கை தொடர்பான முக்கிய நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் புதிய பிரேரணை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும் போது, அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச சமூகங்கள் உணரக்கூடிய மற்றும் […]

கரூர் சம்பவம்: விசாரணை கோரி தமிழக வெற்றிக் கழகம் மனு!

கரூர் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் திகதி பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் […]