மெட்ரோ பஸ் கம்பனி இன்று ஆரம்பம்!

இலங்கையில் நகர்புறங்களில் மெட்ரோ பஸ்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மேல்மாகாணத்தில் 200 பஸ்கள் சேவையில் இணைக்கப்பட உள்ளன. அதற்காக மெட்ரோ பஸ் கம்பனியொன்று (Lanka Metro Transit (Pvt) Ltd) உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இன்று திறந்துவைக்க உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

ஹங்கம இரட்டை கொலை சம்பவம் – பெண் ஒருவரும் கைது!

ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரான பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி பகுப்பாய்வு மற்றும் விசாரணைகளுக்குப் பின்னர், கொலையைச் செய்த முக்கிய சந்தேக நபரான ‘அந்துபெலேன் பிந்து’ என்று அழைக்கப்படும் கடவத்த ஆராச்சிகே சமன் குமாரவுடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக பொலிஸார் சந்தேகம் […]

கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு – அவசியமான தலையீடுகள் அரசாங்கம் மேற்கொள்ளும்!

கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் கட்டமைப்பு ரீதியான அரசாங்கமொன்றாக அவசியமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி கட்டமைப்பில் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்கொள்ளும் விசேட சேவை நாட்டிற்குப் பெருமையாகும் என்றும் அவர் கூறினார். ‘குரு பிரதிபா பிரபா – 2025’ ஆசிரியர் அதிபர்களைப் பாராட்டும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்வி கட்டமைப்பிற் காணப்படும் […]

முதல்முறையாக வெளிநாடு செல்லும் பாப்பரசர் லியோ!

போப் பதினான்காம் லியோ எதிர்வரும் நவம்பர் மாதம், துருக்கி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதாக வத்திக்கான் நிர்வாகம் அறிவித்துள்ளது. வத்திக்கான் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அதையடுத்து, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பெர்வோஸ்ட், மே மாதம் பாப்பரசர் பதினான்காம் லியோவாகப் பதவியேற்றார் மறைந்த பாப்பரசர் பிரான்சிஸை போலவே, உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்ட போர் நிறுத்தங்களைப் பிரசாரம் செய்து […]

இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை!

நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கத்தை இந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரினார். “நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் நடவடிக்கை இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். சுற்றுலாத் துறையின் நலனுக்காக இந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.” “அமெரிக்காவில் பென்டகனுக்கு மேலே கூட விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுகிறது. அப்படியானால், நாடாளுமன்ற வளாகத்தின் மீது விமானங்கள் பறப்பதை […]

விமல், கம்மன்பில போன்றோர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மீண்டெழ முயற்சி!

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள் என மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடாமலே தோல்வியை அறிந்து விலகிக் கொண்டவர்கள் இன்று தேசப்பற்றாளர்கள் போல் பேசுகின்றார்கள். இந்த நாடு இனவாதத்தால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதற்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இன்றும் கடந்த […]

மற்றுமொரு தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போதைப் பொருள் கடத்தி குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதற்காக மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது,” என்று பன்னீரின் சகோதரி சங்கரி பரந்தாமன் தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி மற்றொரு […]

டிக்கெட் இயந்திரங்களுடன் கூடிய பேருந்து; வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணம்!

இலங்கையில் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்களுடன் கூடிய பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கு பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்துகிறது அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு!

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள்  ணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார். நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி […]

நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்!

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள்  ணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார். நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி […]