பங்களாதேஷை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்?

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை (08) மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தானை பங்களாதேஷ் வெள்ளையடித்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் வெல்வதற்கு மிகவும் மேம்பட்ட துடுப்பாட்டப் பெறுபேறுகளைக் காண்பிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இப்ராஹிம் ஸட்ரான், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், செதிகுல்லாஹ் அடல், அணித்தலைவர் ஹஷ்மந்துல்லாஹ் ஷகிடி, உப […]
அல்பேனிய நீதிபதி நீதிமன்றுக்குள் சுட்டுக்கொலை!

அல்பேனியாவில் தலைநகர் டிரானாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நீதிபதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சொத்து தகராறு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டிருந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவ்விருவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “E Sh” என்ற முதலெழுத்துக்களால் அடையாளம் காணப்பட்ட 30 வயது ஆண் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் […]
ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

கொழும்பிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் பயணத்தை ரத்து செய்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு பறவை மோதியது கண்டறியப்பட்டது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். விமானம் தரையிறக்கப்பட்டது, மேலும் […]
வள்ளலாரை வழிபட்ட நடிகர் சிம்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று காலை வெளியான நிலையில், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு வழிபாடு செய்தார். நடிகர் சிம்பு “தக் லைப்” திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இன்று […]
ஸ்ரீதேவி மகளை தரையில் தூங்கவிட்ட வாரிசு நடிகர்!

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை பாரீஸில் தரையில் தூங்க வைத்திருக்கிறார் பாலிவுட் நடிகர் வருண் தவான். ஏம்பா பொம்பள புள்ளய இப்படியா தரையில் படுக்க வைப்பது என்று கேட்டால் காரணம் சொல்கிறார். பாலிவுட் நடிகர் வருண் தவானும், நடிகை ஜான்வி கபூரும் முதல் முறையாக சேர்ந்து நடித்த படம் பவால். அந்த படத்தில் கணவன், மனைவியாக நடித்தபோது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இதையடுத்தே அக்டோபர் 2ம் திகதி திரைக்கு வந்த Sunny Sanskari Ki Tulsi […]
இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்!

இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் பாதியை வழங்க முடிவு செய்துள்ளது, அதே நேரத்தில் பல கொடுப்பனவுகளை நீதித்துறை சேவை ஆணைக்குழு (JSC), நிறுத்தி வைத்துள்ளது. இந்த முடிவை விவரிக்கும் ஒரு சுற்றறிக்கையை நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்னா அல்விஸ் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நீதிபதிகள் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அவர்களின் சம்பளத்தில் 50% பெறுவார்கள் நீதித்துறை சேவை […]
யாழ். தனியார் விடுதிகளில் பண மோசடி!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப் , வைபர், பேஸ்புக் மற்றும் இணைய தளங்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும் எனவும் , அதற்கான 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகும். என சில பெண்களின் புகைப்படங்களில் ,அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்ட […]
யாழில். சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என சட்டத்தரணிகள் சிலருக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காணி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டத்தரணி ஒருவரை கைது செய்யும் நோக்குடன் அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சென்று தேடுதல் […]
சம்மாந்துறை பகுதியில் 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை (06) மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டு மற்றும் தலைக்கவசம் அணியாமல் சென்றமை , சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் சென்றமை, நீதிமன்ற பிடியாணை உள்ள பலர் கைதானதோடு 18 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறை, சவளக்கடை, மத்திய முகாம், கல்முனை, காரைதீவு […]
மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு!

ஹங்கம, ரன்ன, வடிகல – பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் 28 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார், மேலும் அந்த தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் இன்று […]