பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு 8000க்கும் அதிகமான முறைப்பாடுகள்!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த முறைப்பாடுகளின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் துரிதமாக முறைப்பாடு செய்யும் வகையில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் 071-8598888 என்ற WhatsApp இலக்கம் அண்மையில் […]

பம்பலப்பிட்டி பகுதியில் இரவு விடுதி சுற்றிவளைப்பு – ஒருவர் கைது!

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் போயா தினத்தை முன்னிட்டு நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போயா தினத்தன்று மதுபான விற்பனை தொடர்பான தகவல்கள் தெரியவந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்கு பணிபுரிந்த உள்ளூர் மேலாளர், உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்ததற்காகவும், வைத்திருந்ததற்காகவும், வெளிநாட்டு […]

குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்திய சாலையில் இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (07) அன்று மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள டீசைட் தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது. தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் ஒருவரையும் இரு ஆண்களையும் குளவி கொட்டியதால் அம் மூவரையும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்கள் மேலதிக […]

ஆதிவாசி அகராதி வெளியீடு!

ஊவா மாகாண சபையின் ஏற்பாட்டில், ஊவா நவோதயா கலாசார கலை விழாவுடன் இணைந்து ஆதிவாசி அகராதி வெளியீட்டு விழா பதுளை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல, உருவரிகே வன்னில அத்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நீச்சல் தடாகத்தில் காயமடைந்த சிறுவன் மரணம்!

கொழும்பு நீச்சல் கிளப்பில் நடந்த ஒரு சம்பவத்தில் படுகாயமடைந்த எட்டு வயது சிறுவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மாஸ்டர் ஆர்லான் என அடையாளம் காணப்பட்ட அந்த சிறுவன், கொழும்பு கிளப்பில் நடைபெற்ற ஒரு தனியார் பிறந்தநாள் விழாவின் போது நீச்சல் தடாகத்தில் விழுந்து காயமடைந்தார். மூளையில் பலத்த காயங்களுக்கு ஆளானதால், பல நாட்களாக அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் வழங்கப்பட்டன. சம்பவம் நடந்தபோது, ​​குளத்தில் உயிர்காக்கும் எந்த காவலரும் […]

மஹிந்தவை சந்தித்த மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலன் தொடர்பில் கேட்டறிந்து கொள்வறத்கு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர  தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு செவ்வாய்க்கிழமை (07) சென்றார். முன்னாள் ஜனாதிபதியை நேசிக்கும் பல அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் முன்னாள் ஜனாதிபதியின் நலனைக் காண தினமும் கார்ல்டன் இல்லத்திற்குச் சென்று வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டு […]

மன்னாரிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ்ப்பாணத்தில்   சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  வடமாகாண  சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (07) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.  குறித்த பணிப் புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும்  பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதிமன்றத்திற்கு  செவ்வாய்க்கிழமை (7) சட்டத்தரணிகள் சமூகமளிக்காதுபணிப் பகிஷ்கரிப்பைமேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில்   சட்டத்தரணிக்குஎதிராக முன்னெடுக்கப்பட்டசம்பவம் எதிர் காலத்தில் இடம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்தி குறித்த […]

கிழக்கில் 230 கிராம் ஐஸ்: இளம் தம்பதி கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்த 230 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 24,23 வயதுடைய இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் தலைமையிலான பொலிஸார்  திங்கட்கிழமை (06) மாலை கைது செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய தொகை  ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்று    வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர்  சம்பவ […]

அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – பிணையில் விடுதலை!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் பயிற்சி நிபுணர் மருத்துவரை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வழக்கில் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர் செவ்வாய்க்கிழமை (07) பிணையில் விடுவிக்கப்பட்டார். அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார். கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்ட நபர், கல்னேவ புதிய நகரம், எலா வீதி, டி துன் பகுதியைச் சேர்ந்த கே.பி. மதுரங்க ரத்நாயக்க ஆவார். சந்தேக நபரை ரூ. 50,000 […]

அவுஸ்திரேலியக் குழாமில் றென்ஷோ!

இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் மற் றென்ஷோ இடம்பெற்றுள்ளார். றென்ஷோ ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இன்னும் அறிமுகத்தை மேற்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அவுஸ்திரேலியா இறுதியாக விளையாடிய ஒருநாள் தொடரான தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றிருந்த மர்னுஸ் லபுஷைன் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இத்தொடரின் முதலாவது போட்டியை அலெக்ஸ் காரி தவறவிடவுள்ளார். இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளுக்கான குழாம் மாத்திரமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் குழாம்: மிற்செல் மாஷ் […]