ஹட்டன் பிரகடனத்தை மறந்து செயற்படுகிறது அநுர அரசு!

” மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத அரசியல் சக்திகளோடு சேர்ந்து கதிரை அரசியல் செய்ய நினைப்பதையும், வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மலையக மக்களின் தேசியம் காக்கவும், இருப்பு காக்கவும் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் அரசியல் செய்ய மலையக அரசியல் தலைமைகளாக ஒன்று சேர வேண்டும். ” இவ்வாறு மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மா சத்திவேல் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, ” […]

பதவியேற்று 27 நாட்களுக்குள் பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா!

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு பதவி விலகியுள்ளார். கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்று, வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு கடந்த மாதம் தெரிவுசெய்யப்பட்டார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார். இந்த நிலையில்தான், புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

செம்மணி புதைகுழி அகழ்வாய்வுக்கு ரூ. 18 மில்லியன் கோரல்!

இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது. எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட பாதீடு யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் செப்டெம்பர் 18, 2025 அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அந்த தொகை சுமார் ஒரு கோடியே என்பது இலட்சம் (18 மில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து […]

நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது: பொன்சேகாவுக்கு மஹிந்தவின் பேச்சாளர் பதிலடி!

” மஹிந்த ராஜபக்சதான் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்கு கொண்டுவந்தார். பொன்சேகாமீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்கு கொண்டுசென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. இப்படிபட்டவரையே அவர் இன்று கடுமையாக விமர்சித்துவருகின்றார்.” இவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். அத்துடன், இறுதிப்போரின்போது மஹிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என்பது உட்பட பொன்சேகாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார். அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள பொன்சேகா, […]

புதுடில்லி செல்லும் பிரதமர்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார். NDTV உலக உச்சி மாநாடு 2025, உலகளாவிய ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் உலகில் தற்போது மிகவும் செல்வாக்கு மிக்க சில பிரபலங்களை ஒன்றிணைக்கும் என கூறப்படுகின்றது. அவர்களில் தற்போது பதவியில் இருக்கும் இரண்டு பிரதமர்களான இந்தியாவின் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஹரிணி அமரசூரிய […]

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 11 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா குறித்து எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் புலினா ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன – ஐங்கரநேசன்!

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலை, இலக்கியங்கள் அளப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கின்றன. போர்க்களத்தில் ஆயுதங்கள் பேசியபோது மக்கள் களத்தில் நின்று கலை, இலக்கியங்கள் பேசின. போராட்டங்களின் நியாயங்களையும், வலிகளையும் சொல்லி மக்களை எழுச்சிகொள்ள வைத்து அவர்களைத் தேசமாக ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்கள் பெரும் பங்களிப்புகளைச் செய்தன. ஆனால், முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு, எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன. கலை, இலக்கியங்கள் பேசவேண்டிய விடயங்கள் இன்னும் ஏராளம் இருக்க, அவை ஊமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழ்த் […]

அடுத்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக காணப்படும் – உலக வங்கி!

2026 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக காணப்படும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்த நிலையில் தற்போது 6.5 சதவீதமாக காணப்படும் என கணித்துள்ளது. உலகின் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்தும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் […]

கம்பளை விபத்துக்கான காரணம் வெளியானது!

கம்பளை, தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்த நிலையில் காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கம்பளை – தொலுவ பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதியதில் […]