ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) தலைவர் உட்பட அதன் சிரேஷ்ட முகாமைத்துவம் ஜனாதிபதியை சந்திந்தது!

இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார். ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)மற்றும் அதன் சிரேஷ்ட முகாமைத்துவம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தது. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடனுதவியின் கீழ் இதுவரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், […]

”காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை”

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழு (CED), அதன் சமீபத்திய அமர்வில் மதிப்பாய்வு செய்த பிறகு, இலங்கை குறித்த அதன் கண்டுபிடிப்புகளை இன்று வெளியிட்டது. வலிந்து காணாமல் போவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டை செயல்படுத்துவது குறித்த குழுவின் முக்கிய கவலைகள் மற்றும் பரிந்துரைகள் மற்றும் நேர்மறையான அம்சங்கள் இந்த கண்டுபிடிப்புகளில் உள்ளன. முக்கிய பிரச்சினைகள் பின்வருமாறு: காணாமல் போனவர்களின் விரிவான பதிவேடு இல்லாதது மற்றும் அவர்களின் கதி மற்றும் இருப்பிடத்தை தெளிவுபடுத்துவதில் உள்ள […]

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள்!

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்து எடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் என தேசிய சமாதான பேரவையின் நிர்வாக இயக்குனர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.  யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த வருகின்ற நிலையில் செம்மணி விவகாரம் தற்போது பேசு பொருளாக அமைந்திருக்கிறது. செம்மணி அகழ்வின் போது வெளி […]

‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி அறிவிப்பு!

‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் […]

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், சாலமன் கடலில் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் மையம் கிம்பே (Kimbe) நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 194 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு (PTWC) ஆரம்பத்தில் சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை வெளியிட்டு, […]

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸுக்கு வழங்கப்படுவதாக அறிவியலுக்கான ராயல் ஸ்வதேஷ் அகாதமி அறிவித்துள்ளது. மின் சுற்று தொடர்பான ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று வெளியானது. நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 […]

தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் தயக்கம் காட்டும் அரசு – இ.சிறிநாத்!

புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள், போதைப்பொருளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார். இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என கூறுகின்ற அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான தயக்கத்தினை காட்டிநிற்பதையே நாங்கள் காண்கின்றோம் எனவும் தெரிவித்தார். மட்டக்களப்பு […]

புதிய பிரேரணையை முற்றாக நிராகரித்தது இலங்கை!

இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட புதிய பிரேரணை, […]

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலக் கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது. பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை, அதிலிருந்து விடுவித்து அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இதற்காக அரசாங்கத்திடம் மூலோபாயத் திட்டம் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க […]

பரிசோதிக்காமல் விடுவித்த 323 கொள்கலன்கள் குறித்து தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமியுங்கள்!

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்கக் கோரிய பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று (07) பாராளுமன்றத்தில் வைத்து சபாநாயகரிடம் கையளித்தது. கௌரவ சனாதிபதி வழங்கிய வழிகாட்டுதலின்படி திறைசேரி செயலாளரால் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, குறித்த குழு தனது அறிக்கையில் தொடர்புடைய விடயம் குறித்து தனது அவதானிப்பை முன்வைத்து கொள்கலன்கள் விடுவித்த முறை சட்டத்திற்கு மாறானது என்றும், “முறையான […]