பலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரித்தானிய அரசு தீவிரம்

பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பலஸ்தீன ஆதரவுக் குழுவுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் ஆா்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த அதிக அளவிலான அதிகாரத்தை பிரித்தானிய பொலிஸார் பயன்படுத்த வேண்டியிருக்கும் என அரசு நேற்று (5) எச்சரித்துள்ளது. இஸ்ரேல்-காஸா போரின் தொடக்கத்திலிருந்து பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆா்ப்பாட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பிரித்தானிய இராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்துக்கு தொடா்புடைய தளங்களை சேதப்படுத்திய ‘பலஸ்தீன் அக்ஷன்’ என்ற அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவது சட்டவிரோதமானது எனவும் அரசு […]

சிட்னியில் 100 தடவைகள் துப்பாக்கிச் சூடு – 20 பேர் காயம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர், வீதியில் செல்லும் வாகனங்கள், பொலிஸ் வாகனங்கள் மீது சுமார் 100 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினரிடையே எகிப்தில் இன்று பேச்சுவாா்த்தை!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் இன்று திங்கட்கிழமை (அக். 6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் காஸாவில் போா்நிறுத்தத்தை மேற்கொள்ள அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்தாா். அந்தத் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்றுக்கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. இதையடுத்து, காஸாவில் நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டாா். இதைத் […]