குளவி கொட்டுக்கு இலக்காகிய சுற்றுலா பயணிகள்!

மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவை பார்வையிட சென்ற நபர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்டு லுணுகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மல்வானை பகுதிகளிலிருந்து சுற்றுலா வந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை குறித்த நபர்கள் மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிய உலகம் முடிவு பகுதியை பார்வையிட்டு கொண்டிருந்தபோது குளவி கூடு கலைந்து இவர்களை தாக்கியுள்ளது. எலமான் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான […]

யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது – அன்னலிங்கம் அன்னராசா சாடல்!

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும் கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவாக வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழில் உள்ள தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சீன கடலட்டை பண்ணை சூழலுக்கு பாதிப்பா இல்லையா என்று ஒரு ஆய்வை செய்து தருமாறு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்திடம்  கோரிக்கை முன்வைத்தோம். […]

உடைக்க முயன்றால் மலரும் – மஹிந்த ராஜபக்‌ஷ வலியுறுத்தல்!

நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைத்தளத்தில், தமது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களிடையே கழித்ததால், மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாக அவர் பதிவேற்றம் செய்துள்ளார். இதன் காரணமாக, அதன் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் அதிகமாகி உள்ளது எனவும், இது ஓர் அரசியல் உறவு மட்டுமல்ல, கடினமான ஓர் இதயபூர்வமான பிணைப்பு என்றும் அந்தப் […]

கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

திக்வெல்லவில் உள்ள தனது பாடசாலையில் நீச்சல் குளத்தில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவன் திக்வெல்ல, விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாணவர் தனது வகுப்பு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து தற்செயலாக குளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்க அவர் தண்ணீரில் இறங்கிய போது மீண்டும் மேலே வர முடியவில்லை […]

நடிகை சொர்ணமால்யா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகை சொர்ணமால்யா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் சில தினங்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி, ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம், விமான நிலையம், முன்னாள் தலைமைச்செயலர், முன்னாள் டிஜிபி உள்ளிட்ட பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மிரட்டல் இ-மெயில் கடிதங்கள் டிஜிபி அலுவலகத்துக்கே வருகின்றன. அந்த வகையில் நடிகை சொர்ணமால்யா வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள் ளதாக டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்தது. […]

வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்!

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர்அண்ணா உயிரியல் பூங்கா 1490ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா ஆகும். அதில் சிங்கம் உலாவிடம் (லயன் சபாரி) பூங்கா சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு லயன் சபாரிக்காக கூண்டு பொருத்தப்பட்ட வாக னத்தில் பொதுமக்கள் அழைத்து செல்லப் பட்டு, இயற்கைச் சூழலில் உலவும் சிங்கங் களைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் 3 ஆண் மற்றும் 4 பெண் என 7 சிங்கங்கள் உள்ளன. […]

கொள்ளையர்களிடமிருந்து தப்ப முயன்ற தொகுப்பாளர் பலி!

மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் அரைஸ் என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த செய்தி நிறுவனத்தில் சொமுச்குவா சவுமி மடூஹ்வா (வயது 29) செய்தி தொகுப்பாளராக பயணியாற்றி வந்தார். இவர் தலைநகர் அபுஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்நிலையில், சவுமி மடூஹ்வாவின் வீட்டிற்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்ததை அறிந்த சவுமியா தப்பிக்க தனது வீடு அமைந்துள்ள 3வது மாடியில் இருந்து கீழே […]

மஹிந்தவுக்கு உதவத் தயார் – இரு நாடுகள் உறுதிமொழி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக உதவத் தயாரென பிரதான இரண்டு நாடுகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. மஹிந்த பயன்படுத்திய புல்லட் ப்ரூவ் எனப்படும் குண்டுகள் துளைக்காத வாகனங்களை அரசாங்கம் மீளப்பெற்றுள்ள நிலையில், அப்படியான வாகனங்களை மஹிந்தவுக்கு வழங்க முடியுமென இரு நாடுகள் மஹிந்தவிடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தியா அல்லது நன்கொடையாக வழங்கும் அடிப்படையிலா இந்த உதவி வழங்கப்படவுள்ளதென்பது பற்றி இன்னும் தெரிய வரவில்லை. எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளின் தூதுவர்கள் இது […]

போதைப்பொருள் தொடர்பில் ‘களுபோவில சுட்டி’யும் அவரது சகோதரரும் கைது

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின்போதே இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 2 கிலோகிராம் 106 கிராம் ஹெரோயின், 478 கிராம் ஐஸ் மற்றும் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போன்றவற்றையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான களுபோவில அவிஷ்கவின் உதவியாளரான களுபோவில […]

யாழ். பலாலி வீதியில் விபத்து – இருவர் காயம்

பலாலி வீதி புன்னாலைக்கட்டு பகுதியில் இன்று (05) இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்த போது, இராணுவ வாகனத்தின் பின்னால் வந்த லொறி ஒன்று இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை பலாலி பக்கம் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது குறித்த லொறி மோதியது. இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் […]