கனடா மேடையில் கமல்ஹாசனுக்கு ‘கோல்டன் பீவர் விருது’!

திரையுலகில் கமல்ஹாசன் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், ‘கோல்டன் பீவர் அவார்ட்’ (Golden Beaver Award) என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பல விருதுகளைக் குவித்துள்ள கமல்ஹாசன், 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார். வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, […]
“பைசன்தான் என்னுடைய முதல் படம்” – நடிகர் துருவ் விக்ரம்

“பைசன்தான் என்னுடைய முதல் படம்” – நடிகர் துருவ் விக்ரம்
வாழ்த்து மழையில் ’டைட்டானிக்’ பட ஹீரோயின்

டைட்டானிக் பட ஹீரோயின் கேட் வின்ஸ்லெட் தன்னோட 50வது பிறந்த நாளை கொண்டாடினார். கேமரூன் இயக்கத்தில் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில் 1997-ல் ரிலீசான படம் டைட்டானிக். அதில் ரோசாக நடித்த கேட்டை உலகமே கொண்டாடியது. ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, எம்மி விருது, பாப்டா விருது என்று வாங்காத விருதுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அபாரமான நடிகை கேட். அவர் தற்போது வயதில் அரைசதம் கடந்திருக்கிறார். அவரது பிறந்த நாளுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் […]
பொலொன்னறுவை சோமாவதி விகாரை தொல்பொருள் அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது. புத்தர் பெருமானின் புனித தந்ததாது வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க பொலொன்னறுவை சோமாவதி விகாரையை வழிபட வரும் மற்றும் கல்வி ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்களின் வசதிக்காக, வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி ரஜமஹா விகாராதிபதி மஹாவிஹார வன்சிக […]
ட்ரம்ப் சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் – நோபல் விருது குழு!

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நோபல் பரிசுக்கான தெரிவு முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பிறகு அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளை […]
ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு!

கடுகண்ணாவ ரயில் நிலையத்துக்கருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கண்டியிலிருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயில் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். அக்குரஸ்ஸ – கனத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபரே உயிரிழந்தவராவார். இந்நிலையில் மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியிலும் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
அரசாங்கம் வலுவடைகிறது – சொல்கிறார் எஸ்.பி.திசாநாயக்க!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகை வென்று மிகச் சிறப்பாக முன்னேறி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். ஊடக சந்திப்பை நடத்தி இவ்வாறு தெரிவித்த எஸ்.பி. திசாநாயக்க மேலும் கூறியதாவது, ஜப்பான், சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கைக்கு இந்தப் பயணத்தில் உதவும் என்று நான் நம்புகிறேன். சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்தது போல் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் தாமதமின்றி முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைக்க வேண்டும். அரசாங்கம் வலுவடைந்து வருகிறது. எதிர்க்கட்சி […]
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள்!

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 11 வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]
யாழ். பல்கலையின் பொன்விழா!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் பொன் விழா கொண்டாட்டங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 06 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர்கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கிறது. ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை கொண்டாடுகின்றது பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் […]
டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி!

டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப்படை, காவல்துறை […]