அழிவு நிச்சயம்! ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை!

காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அறிவித்தார். ஆனால் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 […]
சிட்னியில் 100 தடவைகள் துப்பாக்கிச்சூடு!

சிட்னி குரோய்டன் பூங்காவில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என உயர் மட்ட பொலிஸ் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். சிட்னி மேற்கில் நேற்றிரவு இடம்பெற்ற இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. பூங்காவை சூழவுள்ள பகுதிகளின் வீதிகள் மூடப்பட்டதுடன், பொது மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 60 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார். அதி உயர் திறன் கொண்ட துப்பாக்கியால் அவர் 100 தடவைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு […]
சுற்றுச்சூழல் ஆர்வலர் துன்புறுத்தல்: இஸ்ரேல் மறுப்பு!

காசாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்த நிலையில், அதில் இருந்த ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் துன்புறுத்தப்பட்டதாக வெளியான செய்தியை, பொய் என இஸ்ரேல் மறுத்துள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் 67,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பட்டினியால் பலர் இறந்து […]
இங்கிலாந்து பிரதமர் இந்தியா விஜயம்!

இங்கிலாந்து பிரதமர் எதிர்வரும் 8 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். கடந்த ஜூலை 23, 24 ஆம் திகதிகளில் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் 56 பில்லியன் டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்தியா வருமாறு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாரமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கீர் ஸ்டார்மர், 2 […]
மஹிந்த தோற்றதால்தான் இலங்கை வீழ்ந்தது: மொட்டு கட்சி சுட்டிக்காட்டு!

” 30 வருடகாலம் நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால்தான் இந்நாடு வீழ்ந்தது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். ” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொடியைக் கண்டாலேயே இந்த அரசாங்கத்துக்கு நடுக்கம் ஏற்பட்டு விடுகின்றது. கட்சியின் கொடிக்கே இவ்வளவு பயமெனில் நாமல் தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு அச்சம் இருக்க வேண்டும்? தற்போது வந்துள்ள பயம் தோல்வி பயமாகும். அந்த […]
ஹிட்லரின் பாதையில் அநுர: ரணில் கடும் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார். எதிரணியினருடன் அரசியல் ரீதியான எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும், உள்ளூர் அரசியல் மேடைகளில் கருத்துத் தெரிவித்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை குறித்தும் இங்குள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைப்பது முறையற்றது […]
தமிழருக்கு சர்வதேச நீதி வேண்டும்: ஜெனிவாவில் சிறீதரன் எடுத்துரைப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், தமிழினப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் – சர்வதேச நீதியை எதிர்பார்க்கும் தமிழ் சிவில் சமூகத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் 60 ஆவது கூட்டத் தொடரின் உபஅமர்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். ‘ 2008 டிசம்பர் முதல் 2009 மே மாதம் வரை இலங்கை அரசு தமிழர்களைக் […]
சீனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவா, செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் அமன்டா அனிசிமோவாவும், 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் லின்டா நோஸ்கோவாவைவும் கைப்பற்றினர். இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இதில் தொடக்கம் […]
மகளிர் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , நியூசிலாந்து மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழந்து 5 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஜார்ஜியா ரன் […]
தங்க ஆடையில் ஜொலித்த நடிகை…வீடியோ வைரல்

டெல்லியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை சாரா அலிகான், தங்க நிறத்தில் ஆடை அணிந்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதில் ஏராளமான மாடல்கள் அணிவகுத்து வந்தநிலையில், நடிகை சாரா அலிகானின் ராம்ப் வாக் ரசிகர்களிடத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலிகான். பிரபல பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் […]