”மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்” – அநுர ஆட்சி சிறப்பானது என்றும் புகழாரம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கிய ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவர் ஊழல், துரோகம் மற்றும் அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், அரசியலமைப்பின் படி, ராஜபக்ஷ “தூக்கு தண்டனைக்கு தகுதியானவர்” என்று கூறினார். முன்னாள் ஜனாதிபதியின் விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்து ராஜபக்சவின் ஊடகத் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த பொன்சேகா, ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி […]
கருப்பு பட்டி போராட்டத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்!

தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் பணியாளர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ளதாக, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷண தெரிவித்துள்ளார். அத்துடன், தபால் பணியாளர்கள், முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால் மா அதிபர் வெளியிட்டுள்ள கருத்துக்கு, தபால் தொழிற்சங்க ஒன்றியம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. தபால் மா அதிபரால் எந்தவொரு விசாரணையும் இல்லாமல் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை […]
பதுளை- செங்கலடி வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!

பதுளை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பதுளை- செங்கலடி வீதியின் 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள மெத்தை கடைக்கு அருகில் நேற்று மாலை (05) மாலை 5.30 மணியளவில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததனால் தடைப்பட்டிருந்த பொது போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பதிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவிக்கின்றார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; குறித்த பகுதியில் இவ்வாண்டின் ஆரம்ப பகுதியில் […]
கம்பளையில் கோர விபத்து- பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கம்பளை – தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் காமடைந்த மற்றுமொரு பெண் சிகிக்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிலொன்றில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த பெண்கள் அந்த பகுதிக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில்.காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான சட்டத்தரணிக்கு பிணை!

யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , அவர் வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர் , பொலிஸார் மல்லாகம் நீதவான் […]
வாகரையில் மினி சூறாவளி – 14 வீடுகள் சேதம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (05) மாலை வீசிய மினி சூறாவளியினால் பதினான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் கே. அமலினி தெரிவித்துள்ளார். வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 211 பி கிராம சேவகர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகள் மூன்றும் பகுதியளவில் பதினொரு வீடுகளுமாக பதினான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பாலர் பாடசாலையின் கூரைகளும் சேதமடைந்துள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கபட்ட வீடுகளின் சேத விபரங்கள் பிரதேச செலக […]
கனடாவில் தகாத செயலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாதண்தில் தகாத செயலில் ஈடுபட்ட நபர் ஓருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொஸ்டான்டினோஸ் பணகியோட்டிஸ் செக்கூரஸ் (Kostantinos Panagiotis Tsekouras) என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் சிறார்களை இலக்காகக் கொண்ட பாலியல் குற்றங்களில் முன்பு தண்டிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகள் வைத்திருந்தார் எனவும் பதிவுகளைத் தயாரித்தார் எனவும் இந்த நபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டள்ளன. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் […]
கனடாவில் திரும்பப்பெறப்படும் டொயோட்டா வாகனங்கள்!

கனடாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரக் கணக்கான டொயோட்டா ரக வாகனங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் மொத்தம் 32,733 வாகனங்களை திரும்பப் பெறுவதாக கனடிய போக்குவரத்து திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பின்புறக் கேமரா (rearview camera) செயலிழக்கவோ அல்லது சரியாக படம் காட்டாமலோ இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “பின்புறக் கேமரா சரியாக இயங்கவில்லை என்றால், வாகனம் பின்நோக்கிச் செல்லும்போது டிரைவர் பின்னால் காணும் திறன் குறையக்கூடும். இது விபத்துக்கான ஆபத்தை அதிகரிக்கலாம்,” […]
ஒட்டாவாவில் பதிவான சாதனை வெப்பநிலை!

கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த 5ஆம் திகதி வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணிக்கு ஒட்டாவா விமான நிலையத்தில் 28.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, 1941ஆம் ஆண்டில் பதிவான 27.2 பாகை சாதனையை முறியடித்தது. பின்னர் பிற்பகல் 3 மணியளவில் வெப்பநிலை உச்சமான 29.7 பாகையாக உயர்ந்தது. மாலை 5 மணியளவில் அது 28.2 பாகையாக குறைந்தது. வழக்கமாக இந்த காலத்தில் ஒட்டாவாவில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 15 பாகையாக இருக்கும். […]
கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி செய்த இந்திய நிறுவனம்!

இந்தியாவின் பெங்களூருவிலுள்ள நிறுவனம் ஒன்று கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனம் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சந்தன் (25) என்பவர், Owlspriority India Pvt Ltd என்னும் நிறுவனத்தில் கனடாவில் வேலை தொடர்பில் விண்ணப்பித்துள்ளார். தங்களுக்கு பெங்களூருவிலும் கனடாவின் வான்கூவரிலும் அலுவலகங்கள் உள்ளதாக இணையத்தில் அந்நிறுவனம் விளம்பரம் செய்திருந்ததைத் தொடர்ந்து, அதை நம்பி கனடாவில் வேலைக்காக அங்கு விண்ணப்பித்துள்ளார் சந்தன். கனடா விசா மற்றும் கனடாவில் வேலை வாங்கித்தருவதாகக் […]