எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்கள் விற்பனை – பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபா அபராதம்!

பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே அந்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வண்டு மொய்ந்த உணவுப்பொருட்கள், காலாவதியான உணவுப்பொருட்கள், எலி எச்சங்களுடன் கூடிய உணவுப்பொருட்கள், பூஞ்சணமான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்பொருள் […]
இலங்கை – அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது!

மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மகளிர் அணி இரண்டாவது போட்டியில் இன்று அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருந்தது. முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதேவேளை அவுஸ்திரேலிய அணி அதன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை வெற்றிக் கொண்டமை […]
யாழில் கத்திக்குத்துக்கு – கடை உரிமையாளர் மரணம்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ளார்கள். அப்போது கடை உரிமையாளர் மிக்சருக்கு உரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளர்களுடைய வாய் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் […]
எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு!

எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும், வீட்டின் ஜன்னல் ஒன்று சேதமடைந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் இந்த சம்பவம் அப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததற்கு பழிவாங்கும் […]
கிரிப்டோகரன்சி குறித்து முடிவுகளை எடுக்குமாற மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை!

‘கிரிப்டோகரன்சி’யை எவ்வாறு தொடரலாம் என்பது குறித்த கொள்கை முடிவுகளை எடுக்க உயர்மட்டக் குழுவை நியமிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அரசாங்கமும் இதற்கு ஒப்புக்கொண்டதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் ‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்கு செய்தி வெளியிட்டுள்ளன. கிரிப்டோகரன்சிகளை இலங்கை எவ்வாறு தொடரும் என்பது குறித்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான பரிந்துரைகளைப் பெறுவதே முன்மொழியப்பட்ட குழுவின் நோக்கமாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க […]
வெற்றிப் பாதையில் செல்லும் இலங்கை – IMF புகழாரம்!

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கொசெக் மேலும் கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் விரிவான சீர்திருத்தத் திட்டம் பற்றி நான் கூறக்கூடியது என்னவென்றால், அது தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவாகவே உள்ள நிலையில், […]
தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி!

தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தஹிதா காத்ரி அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண தடை விதிக்கப்பட்ட முத்தஹிதா பயணம் செய்ய ஐ.நா. பாதுகாப்பு போரவை அனுமதி அளித்துள்ளதாக வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். முத்தஹிதா காத்ரி இந்த மாதம் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இந்தியாவில் […]
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சென்னையின் மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை!

இயலாமைக்கும், சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (3) தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை கடலை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். இராமேஸ்வரம் அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் […]
வாசிம் தாஜுதீனை பின்தொடர்ந்து சென்ற கஜ்ஜா – CID உறுதி!

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் முன்னர் அவர் பயணித்த காரை, “கஜ்ஜா” என்றும் அழைக்கப்படும் அருணா விதானகமகே ஜீப் ஒன்றில் பின்தொடர்ந்து சென்றதை குற்றப் புலனாய்வுத் துறை (CID) உறுதிப்படுத்தியுள்ளது. தாஜுதீனின் கொலை தொடர்பாக, கடந்த 13 ஆண்டுகளாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை நடத்தி வருகிறது. இருப்பினும், இந்தக் கொலைக்கு நேரடியாகப் பொறுப்பான நபரை புலனாய்வாளர்களால் இன்னும் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை. அண்மையில் கஜ்ஜாவின் மனைவி புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் ஒன்றை அளித்திருந்தார். இந்த […]
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தீப்பந்த போராட்டம்!

அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினார்.