கரூர் சம்பவம்: விஜய் கைது செய்யப்படுவார்!

கரூர் விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ” கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிபதி பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். சீமானை கேட்டால், அவரும் 234 தொகுதிகளிலும் வெற்றி […]
கண்ணிவெடி அகற்றும் பணியை மீண்டும் முன்னெடுக்குமாறு வேண்டுகோள்!

கிளிநொச்சி – தட்டுவன்கொட்டி பகுதியில் மீண்டும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டிப் பகுதியில் அண்மையில் வெடிபொருள்களைக் கையாண்ட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அ த்துடன், மேலும் சில இடங்களிலும் வெடிபொருள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே, அங்கு மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் மேலும் தெரிவித்ததாவது:- “போரின் பின்னர் […]
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பணிநீக்கம்!

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உரித்தான நிலத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கோப் குழுவில் வௌிக்கொணரப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமாக தற்போது தினேகா ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல்: எதிரணிகள் கூட்டு அரசியல் சமர்!

மாகாணசபைத் தேர்தலை விரைவில் பெறுவதற்குரிய எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் உக்கிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ‘தேசிய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாகவே மாகாணசபைத் தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டது. உயிர் தியாகங்களுக்கு மத்தியிலேயே இம்முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, மாகாண சபை முறைமை அவசியம். மாகாணசபைத் தேர்தல் பற்றி எதிரணிகள் கதைக்கின்றனவா என கேள்வி எழுப்படுகின்றது. இது பற்றி நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறோம். மாகாணசபைகளின் கீழ் நிறைய பாடசாலைகள், […]
மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் ‘த்வனி’ ஹைப்பர்சோனிக் ஏவுகணை டிசம்பரில் சோதனை!

மணிக்கு 7,400 கிமீ வேகத்தில் சீறிப் பாயும் த்வனி ஏவுகணை டிசம்பரில் சோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகியவை முன்னோடிகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது பிரம்மோஸைவிட அதிவேகமாக சீறிப் பாயும் த்வனி என்ற ஏவுகணையை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) […]
அதிநவீன கடலோர காவல் படை ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

இந்திய கடலோர காவல் படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்துக் கப்பல், காரைக்காலில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்திய கடலோர காவல் படையின் காரைக்கால் மையம் நிரவி பகுதியில் செயல்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் உள்ள அதானி கப்பல் துறைமுகத்தில் உள்ள தளத்தில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல்கள், படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த மையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், கோவா கப்பல் கட்டும் தளத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட […]
இலங்கை குறித்த தீர்மானத்துக்கு 22 நாடுகள் இணை அனுசரணை!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையை நீடிப்பதற்கான, திருத்தப்பட்ட வரைவுக்கு இணை அனுசரணை வழங்க 22 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி வரைவுத் தீர்மானத்தின் முக்கிய ஆதரவாளர்களாக, பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியவை உள்ளன. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், முக்கியமாக ஐரோப்பிய நாடுகள், ஒக்டோபர் 1 ஆம் திகதி அன்று சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட வரைவுத் […]
ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் – பாஜக எம்.பி. நிஷிகாந்த் வலியுறுத்தல்!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்களுக்கு முன்னர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது இஐஏ பல்லைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்தியாவில் பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ளன. ஜனநாயக அமைப்பு அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. தற்போது, அந்த ஜனநாயக அமைப்பு பாஜக தலைமையிலான அரசின் கீழ் பல திசைகளில் இருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய […]
பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை!

காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள், காசா பகுதி இராணுவமயமாக்கப்படும். இது எளிதான வழி அல்லது கடினமான வழி, ஆனால் அது அடையப்படும்,” என்று நெதன்யாகு அரசு தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில அம்சங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் நெதன்யாகுவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாளை (06) […]
நாரம்மல பகுதியில் அதிகாலையில் நடந்த விபத்து – மூவர் பலி!

பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே அந்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வண்டு மொய்ந்த உணவுப்பொருட்கள், காலாவதியான உணவுப்பொருட்கள், எலி எச்சங்களுடன் கூடிய உணவுப்பொருட்கள், பூஞ்சணமான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்பொருள் […]