இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்திய அறுவருக்கு மரணதண்டனை!

இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்தியதாக கைதான 6 பேரின் மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம்  12 நாட்கள் இடம்பெற்ற போரில் குஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள கோர்ரம்ஷஹர் பகுதியில் குண்டுவெடிப்புகள் நடத்தியதாகவும், பொலிஸ்  அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்றதாகவும் 6 பேரை ஈரான் அரசு கைது செய்தது. இஸ்ரேல் உத்தரவுப்படி இவர்கள் தாக்குதல் நடத்தியதாக இரகசிய விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டு 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 6 பேரின் மரண […]

ஆஸி. உடன் மோத அணித் தலைமையில் மாற்றம்!

ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு ஷுப்​மன் கில் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கேப்​டன் பதவியி​லிருந்து ரோஹித் சர்மா விடுவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர் அணி​யில் தொடர்​கிறார். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் தொடரில் இந்​திய அணி தற்​போது விளை​யாடி வரு​கிறது. இந்த தொடர் முடிந்​தவுடன் இந்​திய அணி ஆஸ்​திரேலியா சென்​று, அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடர், 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாட […]

மக்களின் அன்பு அரசியல் உறவைத் தாண்டியது – மஹிந்த ராஜபக்ச கருத்து!

நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளர். தமது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களிடையே கழித்ததால், மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாகக் கூறியுள்ளார். இதன் காரணமாக, அதன் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் அதிகமாகி உள்ளதாகவும், இது ஒரு அரசியல் உறவு மட்டுமல்ல, கடினமான ஒரு இதயப்பூர்வமான பிணைப்பு என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். எனவே, […]

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 06 ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க இந்திய அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் மகளிர் உலகக்கிண்ண தொடரிலும் கைகுலுக்கலுக்கான மறுப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு இனந்தெரியாதோர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவு குறித்த வீட்டிலுள்ளவர்கள் வீட்டின் வெளிக்கதவை மூடிவீட்டு வீட்டிற்குள் இருந்த வேளை இரவு 10.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வராது அயலவவர்களை அழைத்த போது குறித்த தாக்குதல் நடாத்தியவர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் […]

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது -பின்னவலைக்கு 78 கோடிகள் வருமானம்!

கடந்த செப்டம்பர் மாதத்தில் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் செம்டம்பரில் 30.24 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 49,697 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அத்துடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 10,527 பேரும், ஜெர்மனியிலிருந்து 9,344 பேரும், சீனாவிலிருந்து 10,527 பேரும் மற்றும் பிரான்சிலிருந்து […]

காதலர் தினம் திரைப்பட பாடகர் சத்யனுக்கு பைசனில் வாய்ப்பு!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பாடகர்களுக்கான வாய்ப்புகள் சரியாகக் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.பெரும்பாலானப் பாடல்களை இசையமைப்பாளர்களே பாடி விடுகின்றனர். அப்படி இல்லையென்றால் பாடலுக்கு சம்மந்தமே இல்லாத நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோரைப் பாடவைத்து பாடலை பிரபலமாக்குகின்றனர். அதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கலக்கி வந்த பாடகர்களான க்ரிஷ், கார்த்தி, நரேஷ் ஐயர் போன்ற பிரபல பாடகர்களுக்கே வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் கணிசமான எண்ணிக்கையில் ஹிட் பாடல்கள் பாடி இருந்தாலும் பெரிய அளவில் […]

நரகத்தின் தூதரான அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்காவில் அரசு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பான சட்டமூலம் நிறைவேறுவதற்கு தேவையான 60 சதவீத பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் டிரம்ப் அரசாங்கத்தால் பெற முடியவில்லை. இதனால் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நரக தூதராக வேடமிட்டு பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நரக தூதர்போல ஜனாதிபதி டிரம்பை சித்தரித்து இந்த ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அமெரிக்க அரசு நிர்வாக முடக்கத்தை எதிர்க்கும் விதமான கருத்துகள் அடங்கிய […]

ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி!

உக்ரைனில் பயணியர் ரயில் மீது, ரஷ்ய ராணுவம் ‘ட்ரோன்’ தாக்குதல் நடத்தியதில் 30 பேர் பலியாகினர். கிழக்கு ஐரோப்பிய நாடா ன உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம் ‘ட்ரோன்’ தாக்குதல் நடத்தியது. கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 30 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அங்கு மீட்புப் […]

போர் நிறுத்த திட்டத்துக்கு ஹமாஸ் இணக்கம்: தாக்குதலை உடன் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவு!

போர் நிறுத்தம் தொடர்பான அமைதி திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்த உடன், காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்து பேசியிருந்தார். அப்போது காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்க அவர் […]