வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்திர தேர் திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்திர தேர் திருவிழா இன்றைய தினம்(5) ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது. தேர் திருவிழாவின் போது, யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்டை , ஆட்டக்காவடி , தூக்கு காவடி பால் காவடி,கற்பூர சட்டி எடுத்து தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். நாளைய தினம் திங்கட்கிழமை மாலை சமுத்திர தீர்த்தம் மிக சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. photo – freepik
குட்டிப்புலத்தில் வீட்டினை கையளித்த கடற்தொழில் அமைச்சர்!

வீட்டு திட்டம் தேவைப்படுகின்ற அனைவருக்கும் வீடு திட்டத்தை வழங்குவதோடு மக்கள் வறுமையின்றி அடிப்படை வசதிகளோடு வாழ்வதற்கு ஏற்றவாறு தமது அரசாங்கத்தால் வீடுகள் வழங்கப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை குட்டியப்புலம் பகுதியில், ‘சமட்ட நிவஹண’ வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று அதன் பயனாளியிடம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான வீட்டினை கையளித்தார். வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் […]
நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது!

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்தத் திட்டம் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், நெடுந்தீவு வாழ் மக்கள் கொழும்பில் உள்ள அதே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது, தீவகத்தில் உள்ள […]
மோடி புத்திசாலியான தலைவர் – புட்டின் பாராட்டு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமச்சீரான மனநிலை கொண்ட புத்திசாலியான தலைவர் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பாராட்டு தெரிவித்தார். ரஷ்யாவின் சோச்சி நகரில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பேசியதாவது: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெயை இறக்குமதி செய்வது முற்றிலும் பொருளாதார நலனுக்கானது. அதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. நமது மசகு எண்ணெயை இந்தியா வாங்க மறுத்தால் அந்நாட்டுக்கு சில இழப்புகள் ஏற்படும். இந்திய மக்கள், அரசியல் தலைமை […]
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் 15 மாவட்டங்களுக்கு, மின்னல் தாக்கங்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில், 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் […]
மிக்சரால் முரண்பாட்டில் ஒருவர் படுகொலை – யாழில் சம்பவம்!

ஏழாலை மேற்கு பகுதியில் ஆணொருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டாள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் கடை ஒன்றினை நடாத்தி வருகின்றார். அந்த கடைக்கு மதுபோதையில் சென்ற சந்தேகநபர் மிக்சர் பக்கட்டுகளை தருமாறு கேட்டுள்ளார். ஏற்கனவே கடனுள்ள காரணத்தால் அவர் மிக்சர் பைக்கட்டுகளை கொடுக்க மறுத்ததன் காரணமாக இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. முரண்பாடு கைகலப்பாக மாறிய நிலையில் கத்தியால் குத்தி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையை மேற்கொண்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகளை […]
விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு தங்காலை பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது. இதன்படி, நாளை காலை 10 மணிக்கு தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. “பெலியத்தே சனா” எனப்படும் நபர் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பிலான உண்மைகளை விசாரிக்க இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகபட்ச செயற்பாட்டு திறனை எட்டியது கட்டுநாயக்க விமான நிலையம்!

கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) தற்போது அதன் திட்டமிட்ட கொள்ளளவை விட அதிகமாக இயங்குகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குளிர்காலத்திற்காக வாரத்திற்கு கூடுதல் விமான இடங்களுக்கான சுமார் 40 புதிய கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே குறைந்த இடவசதி காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுற்றுலா துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 2025 அக்டோபர் இரண்டாம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் […]
வாரத்தில் 07 நாட்களும், காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை!

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் 07 நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரை நாளாந்தம் கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த கப்பல் சேவை இடம்பெற்றுவந்தது.
நகைக் கடையில் கைவரிசை – கண்டியில் தம்பதியினர் சிக்கினர்!

கண்டியில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்குவதாகக் கூறி உள்ளே நுழைந்து நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டியில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, கண்டி காவல் தலைமையகத்தின் குற்றப்பிரிவு உடனடியாக அந்த அழைப்பை ஏற்று, அதிகாரிகள் நகைக் கடைக்குச் சென்று, திருடப்பட்ட நகைகளை மறைத்து வைத்திருந்தபோது சந்தேகத்திற்கிடமான தம்பதியினரைக் கைது செய்தனர். தலத்துஓயா எதுல்கம பகுதியைச் சேர்ந்த இந்த […]