ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி!

ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள சனே தகைச்சி, இம்மாத மத்தியில் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜப்பானின் ஆளும் கட்சியாக லிபரல் டெமாக்ரடிக் கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவராகவும் ஜப்பானின் பிரதமராகவும் இருந்த ஷிகெரு இஷிபா, ஓராண்டு பதவிக்காலத்துக்குப் பிறகு பதவி விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் சனே தகைச்சி வெற்றி பெற்றதாக இன்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவில், மொத்தமுள்ள […]

போர் நிறுத்த திட்டத்துக்கு ஹமாஸ் இணக்கம்: தாக்குதலை உடன் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுள்ள நிலையில், அதனை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸின் முடிவை அமைதிக்கான முக்கிய படியாக சுட்டிக்காட்டியுள்ளன. பணயக் கைதிகளை விடுவிப்பதும், போர் நிறுத்தம் செய்வதும் இப்போது சாத்தியம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும். இரு தரப்புகளும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று […]

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் வாசிம் அக்ரம் கைது!

ஹரியானாவின் பல்வால் மாவட்டம் கோட் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசிம் அக்ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற தலைப்பில் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் அதன் தூதரகத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உளவு பார்க்கும் வேலையை வாசிம் அக்ரம் செய்துவந்துள்ளார். அக்ரம் தொலைபேசியிலிருந்து வாட்ஸ்அப் உரையாடல்களை போலீஸார் கண்டறிந்துள்ளனர். பாகிஸ்தானின் மற்றொரு உளவாளியான தவுபிக்கை கைது செய்து விசாரித்தபோது அவர் அக்ரம் குறித்த தகவல்களை தெரிவித்தார். அப்போதுதான் உண்மைகள் தெரிந்தது. அக்ரம் மற்றும் […]

ரீல்ஸ் எடுக்கும்போது ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு!

பிஹாரில் ஜோக்பானி – தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பூர்னியா- கஸ்பா ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று அதிகாலையில் இந்த ரயில் வரும்போது, மாணவர்கள் 5 பேர் ரயில் பாதையில் நின்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அப்போது ரயில் மோதியதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ரயில்வே போலீஸார் இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வழியில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான […]

குண்டு துளைக்காத வாகனத்தை மீள கையளித்தார் மஹிந்த – உயிராபத்து என்கிறார் சட்டத்தரணி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே, வெளியிட்ட விசேட அறிக்கையில், குறித்த வாகனம் நேற்று திருப்பி கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஜனாதிபதிகளின் உரிமைகள் நீக்குதல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின், செப்டம்பர் 24 அன்று ஜனாதிபதி செயலாளர், மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களையும் திருப்பி கையளிக்குமாறு அறிவித்ததாக மனோஜ் கமகே […]

திசைக்காட்சி ஆட்சியில் வடக்கில் மறுமலர்ச்சி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ் ‘குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின்’ ஆரம்ப நிகழ்வு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் […]

இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தல்: கோரிக்கை முன்வைப்பு!

மாகாணசபைகளுக்குரிய தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய. கொழும்பில் நடந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ” நாட்டில் கடந்த 11 வருடங்களாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. எனினும், உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்த பின்னர், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன. ஆளுநர்களின்கீழ்தான் மாகாணசபை செயற்படுகின்றது. ஆனால் அந்த அதிகாரம் மக்கள் பிரதிநிதிகள் வசம் […]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தக்கவைப்பு!

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தற்போது நீக்கப்படக்கூடாது.” – என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போது நீக்க வேண்டாம் என அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏனெனில் இந்நாட்டில் ஜனாதிபதியொருவர் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் நாட்டின் இருப்பு ஆட்டம் காணக்கூடும். எனினும், ஏதேனும் ஒரு நாளில் இரண்டுக்கு மேற்பட்ட வலுவான கட்சிகள் இந்நாட்டில் உதயமானால் […]

திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்யாதீர்!

தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கட்சிகளிடமும் அமைப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சி.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார். ‘ அண்மைக்காலமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தியாக தீபம் திலீபனுக்கு […]