வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) வாளுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.