மீள் எழுச்சித் திறன் கொண்டதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவு

பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்தினுள் 2025 நவம்பர் 27ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பீடாதிபதிகளைச் சந்திப்பதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு அவர் டிசம்பர் 07ஆம் திகதி விஜயம் செய்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விஜயமானது, கல்விசார் கட்டடங்கள், மாணவர் வசதிகள் மற்றும் பிரதான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களை நேரடியாகப் பார்வையிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதன் போது, முகாமைத்துவம், விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பீடங்கள், தகவல் தொழில்நுட்ப நிலையம், CDCE, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் தடாகம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்புகளை எடுத்துக்கூறி, பாதிப்பின் தீவிரத்தன்மை குறித்துப் பல்கலைக்கழக அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

இந்தப் பேரழிவினால் கல்விச் செயற்பாடுகளுக்கும், மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய விதம் குறித்தும் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. 110 இற்கும் அதிகமான கணினிகள், அத்தியாவசியமான ஆய்வுகூட உபகரணங்கள், பரீட்சை ஆவணங்கள் மற்றும் நான்கு பிரதான தகவல் தொழில்நுட்ப வழங்கிகள் (Server) ஆகியன அழிவடைந்துள்ளதாகவும், ஆரம்பச் சேத மதிப்பீடு 6 பில்லியன் ரூபாயை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனர்த்தத்தை அடுத்து மகாவலி ஆற்றங்கரையில் அமைந்திருந்த விடுதிகளில் இருந்து சுமார் 750 மாணவர்களை விரைவாக வெளியேற்றியமைக்காகப் பிரதமர் பாராட்டினைத் தெரிவித்தார். அத்துடன், நெருக்கடி காலத்தில் வளாகத்தில் தங்கியிருந்த சுமார் 11,000 மாணவர்கள் வெளிப்படுத்திய மன உறுதியையும் அவர் பாராட்டினார். அணுகல் மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகத் தடைப்பட்டிருந்த போதிலும், உணவு, நீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுத்தமைக்காக இலங்கை இராணுவம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் உள்ளூர் நன்கொடையாளர்களுக்கும் அவர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

கூட்டுப் பொறியியற் குழுவின் அறிக்கையின்படி, வெள்ளத்தால் சூழப்பட்ட பல்கலைக்கழகக் கட்டடங்கள் கட்டமைப்பு ரீதியாக உறுதியான நிலையில் இருக்கின்றன. ஆயினும், பல கட்டடங்களுக்கு அவசர திருத்தங்கள் தேவைப்படுகின்றன. டிசெம்பர் 15ஆம் திகதி வரை கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும், கல்வி மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்துத் துணைவேந்தர் மற்றும் அவசர நடவடிக்கைகளுக்கான குழுக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

sr

காலநிலை; முக்கிய அறிவிப்பு

December 9, 2025

அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று

ct

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் கோரிக்கை

December 9, 2025

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நிலவிய அனர்த்த

tn

தமிழ்நாட்டிலிருந்து 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்கள்

December 9, 2025

இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை

indo

இந்தோனேசியாவில் தீ விபத்து!

December 9, 2025

இந்தோனேசியாவில் அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் ஜகார்த்தாவில்

hatt

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை

December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினை தொடர்ந்து ஹட்டன், கண்டி பிரதான வீதியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும்

ind

பேரிடர் பணிகளுக்காக செயற்படும் இந்தியாவின் நான்கு போர்க் கப்பல்கள்

December 9, 2025

இலங்கையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆதரிக்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த

scoo

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு?

December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள

photo-collage.png (7)

கனடா பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

December 9, 2025

கனடா பிராம்ப்டனில் ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பீல் பகுதிப் பொலிசார் தெரிவித்தனர்.

lan

மீண்டும் அறிமுகமாகிறது நிலையான தொலைபேசி

December 9, 2025

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நிலையான தொலைபேசி மீண்டும் மக்கள் கைகளில் தவழ உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட்

sea

உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள்

December 9, 2025

நடப்பாண்டில், உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய, 10 செய்திகளின் பட்டியலை, பிரபல தேடுபொறி நிறுவனமான, ‘கூகுள்’ வெளியிட்டுள்ளது. அதன்

ne

 ‘நெட்பிளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ இணைப்புக்கு எச்சரிக்கை!

December 9, 2025

‘நெட்ப்ளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்தால், அது ஓ.டி.டி., சந்தையில் பிரச்னையை ஏற்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு

sud

 சூடானில் ‘ட்ரோன்’ தாக்குதல்!

December 9, 2025

வட ஆப்ரிக்க நாடான சூடானில், கோர்டோபான் மாகாணத்தின் கலோகி நகரில் உள்ள மழலையர் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து,