மலையக மக்களை மீள்குடி அமர்த்துவது தொடர்பிலும், இந்திய தமிழ்நாட்டு மீட்பு உதவிகள் கிடைக்கப்பெற்றுமை தொடர்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்த கருத்து.
அனர்த்ததின் பின்னர் நாம் தோட்டங்களுக்கு விஜயம் செய்தபோது பாதிக்கப்பட்ட பல மக்கள் பாடசாலைகள், கலாசார மண்டபங்களில் சந்தித்தோம். அடுத்ததாக அவர்களை எங்கே பாதுகாப்பாகக் குடியமர்த்துவது என்பது தொடர்பாக தோட்ட நிர்வாகத்துடன் கதைத்திருந்தோம். மக்களை குடியமர்த்த அவர்கள் வசித்த இடம் பொருத்தமில்லாமலிருந்தால் மாற்று இடங்களை வழங்க நீண்ட நாட்கள் செல்ல வாய்ப்புள்ளது.
இது மக்களை மேலும் கஷ்டங்களுக்குள் தள்ளிவிடும். அதனால் முடிந்தவரை மேலிடங்களோடு பேசி மக்கள் பாதுகாப்பாக வசிக்கத் தக்க இடங்களை அடையாளங்காணுமாறு குறிப்பிட்டிருந்தோம்.
அத்தோடு தற்காலிகமாக இருப்பிடங்களை உருவாக்கி மக்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதையும் நாங்கள் தெரியப்படுத்தியுள்ளோம். உடனடியாக தோட்ட மக்களுக்கான வாழ்விடம் தொடர்பாக முடிவெடுப்போம் என வஜிர உறுதியளித்துள்ளார்.
அத்தோடு இந்தியாவிடமும் உதவிகளைக் கேட்டிருக்கின்றோம் எனத் தெரிவித்த அவர் தமிழகமானது இந்த பேரிடரின்போது மாத்திரமன்றி சகல வழிகளிலும் கடந்த காலங்களில் இலங்கைக்கு கரம்கொடுத்திருப்பதை நாங்கள் இந்தவேளையில் குறிப்பிட விரும்புகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
By C.G.Prashanthan