சிவனொளிபாதமலை – ஹட்டன் வீதியில் உள்ள மஹாகிரிதம்ப பகுதியில் மண் மேடு இடிந்து விழுந்ததில், சிவனொளிபாதமலை தரிசிப்பதற்காக முந்தைய கால யாத்ரீகர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரும்பு படிக்கட்டு மற்றும் பாதுகாப்பு சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர், சபரகமுவ இரத்தினபுரி மாவட்டத்தின் தலைமை சங்க நாயகர் மற்றும் பெல்மடுலு தாகப் ராஜமஹா விஹாராதீஸ்வர பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
இந்த வீதியில் சுமார் 20 அடி நீளமுள்ள இரும்பு படிக்கட்டில் 10 அடி நீளமுள்ள இரும்புச் சங்கிலி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.