பேரிடரின் போது தமக்கு உதவிய ஜனாதிபதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நன்றிக் கடிதம்

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் நேற்று (08) கடிதமொன்றைக் கையளித்தனர்.

இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்து கொண்டனர்.

இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர்.

மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவு கூர்ந்தனர்.

இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர்.

மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார்.

gramba

அரசியல் அழுத்தம்; நிவாரணத்தை சரியாக செய்ய சிரமம்?

December 9, 2025

நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம் – கிராம உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில்

mana

மீண்டும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

December 9, 2025

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான

Weather

இன்றைய வானிலை

December 9, 2025

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென

man

மன்னார் மாணவர்கள் ஜோர்ஜியாவில் சாதனை

December 9, 2025

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை

sid

தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன – சித்தார்த்தன்

December 9, 2025

தமிழ்த்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன்

s

நிவாரண உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

December 9, 2025

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர்

co

வெல்லாவெளி தொல்பொருள் திணைக்கள பணிக்கு இடையூறு; 56 பேருக்கு எதிராக வழக்கு

December 9, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை

com

பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள்…

December 9, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

in su,

வடக்கில் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவிகளை தமிழக உறவுகள் நேரடியாக கொண்டு வர வேண்டும்

December 9, 2025

“தமிழகத் தொப்புள் கொடி உறவுகள், வடக்கில் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு அனர்த்த நிவாரண உதவிப் பொருள்களை நேரடியாக எடுத்து வருவதற்கான அனுமதியை

ch

சீன போர் விமானங்கள் எமது ரேடாரை குறிவைக்கின்றன – ஜப்பான் குற்றச்சாட்டு!

December 9, 2025

ஜப்பானின் ஒகினாவா தீவுகளுக்கு அருகே இரண்டு சந்தர்ப்பங்களில், சீன போர் விமானங்கள் ஜப்பானிய இராணுவ விமானங்களை நோக்கி தங்கள் ரேடாரை

gaza

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சி!

December 9, 2025

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

Tsu

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை?

December 9, 2025

ஜப்பானின் வடக்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து