அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
நிலவிய அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் நிவாரண வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமையினால் பெருமளவான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின்,
இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
பிள்ளைகள் தொடர்பில் தற்போது 25,000 ரூபா பணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுரக்ஷா காப்புறுதி முறைமை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் ஊடாக பிள்ளைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
ஆனால் அதன் ஊடாக பிள்ளைகளுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் கடன்களைப் பெற்றுள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
எனவே அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்கள் தொடர்பில் ஏதேனும் ஒரு சலுகை அடிப்படையிலான முறையில் செயற்பட வேண்டும்.
அரசாங்கம் தலையிட்டு கடன்களை இரத்து செய்வதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.