வவுனியா வைரவபுளியங்குளத்தை பிறப்பிடமாகவும் 32, குட்செட் வீதி.
வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் சிவபாத
சுந்தரம் (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்.
அகில இலங்கை சமாதான நீதவான்.
செய்தி நிருபர். சத்திய பிரமாண மொழிபெயர்ப்பாளர்)அவர்கள் காலமானார்.
அன்னார் அமரர் மயில்வாகனம்
நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் அமரர் முருகேசு தங்கமுத்து தம்ப
திகளின் மருமகனும் சி.தவமலர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின்
அன்பு கணவரும் Dr.ச.குமுதினி (மருத்துவபீடம் – யாழ்ப்பாணம்).
மு.சிவாஜினி (உதவி ஆசிரியர்-கனடா), இ.தர்சினி (கணக்காளர் -நியூசி
லாந்து) ஆகியோரின் அன்புத்தந்தையும் Dr.சி.சஞ்சயன் (மருத்துவ பீடம்
யாழ்ப்பாணம்). ப.முரளிதரன் (கனடா). இ.இரவிதரன் (பொறியிய
லாளர் நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்
தரணியா. யதுமிதா. ஆதித்தன். அக்ஷயன். தனுசாந். ஹரீஷ் ஆகியோரின் அன்புப்
பேரனும் அமரர் மகேஸ்வரி. அமரார் பரமேஸ்வரி. இராஜேஸ்வரி (ஓய்வு)
பெற்ற கிராம சேவையாளர்). சரோஜினி தேவி. துரைரட்ணம் (ஓய்வு
பெற்ற உத்தியோகத்தர் இலங்கை வங்கி). அமரர் சரஸ்வதி ஆகி-
யோரின் அன்பு சகோதரரும் அமரர் சிவசிதம்பரம். அமரர்
பாலசுப்பிரமணியம். ஜெயதரன் (ஓய்வுநிலை அதிபர். வ/விபுலானந்தா
கல்லூரி), தங்கவேலாயுதம். யசோதா ஆகியோரின் மைத்துனரும்
ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25.11.2025 நாளை செவ்வாய்க்கிழமை
இல.32. குட்செட் வீதி. வவுனியாவிலுள்ள அன்னாரின் இல்லத்தில்
அஞ்சலிக்காக காலை 8.00 மணியளவில் வைக்கப்பட்டு நண்பகல் 12
மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று தட்சனாங்குளம் இந்து
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்.
உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : சி.சஞ்சயன் (மருமகன்) – 0773624903