நாட்டின் தெற்கு கடற்பரப்பில், போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த படகுகளில் சுமார் 600க்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ரி56 ரக துப்பாக்கிகள் 2, பிஸ்டல் ரக கைத்துப்பாக்கிகள் 8 மற்றும் M16-2 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டை சுற்றியுள்ள தெற்கு ஆழ்கடல் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட கடல்சார் நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.