தமிழ்த்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கலந்துரையாடிவருகின்றோம் அவ்வாறே தற்போது அடுத்தகட்டத்தை நோக்கிய செல்வதற்காக சந்திப்புகள் இடம்பெற்றுவருகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஐனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டபோதே இதனை தெரிவித்தார் .அவர் மேலும் தெரிவிக்கையில்
பாராளுமன்ற தேர்தலுக்கு அப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மாற்றுக்கட்சிகளை ஆதரித்தவர்களின் மனவெளிப்பாடுகள் தொடர்பாக மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளதை நாங்கள் அறிந்து கொண்டதுடன் மக்களே எம்மை நோக்கி வருவதையும் நாம் அவதானித்து வருகின்றோம்.
இவ்வாறான சூழலில் அடுத்தகட்ட நகர்வுகளை மக்களின் தேவைகளை நாம் நிறைவேற்றிகொள்வதற்கு நாங்கள் முதலில் ஒன்றிணையவேண்டும். குறிப்பாக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இருக்கின்ற தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி பொறுப்பு எங்கள் ஒவ்வோறுவரிடம் உள்ளது அந்தவகையில் நாம் சந்திப்புகளில் ஈடுபடுகின்றோம் சந்திப்புகளின் போதும் ஒன்றிணைந்து செயற்படுவதையும், வடக்கு மாகாணசபை தேர்தல், அரசியலமைப்பு தொடர்பாக போசிவருகின்றோம் அடுத்த கட்டமாக தமிழ்தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து ஒரே குடையாக செயற்படவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.
நாங்கள் பிரிந்து நிற்பதால் எதையும் சாதிக்கப்போவதில்லை நாங்கள் பிரிவது மாற்று சக்திகளுக்கே சாதமாக மாறிவிடும் . தமிழ்மக்களின் கோரிக்கைகள் அரசியல் தீர்வு விடயங்கள் அடிபட்டுபோகும் நிலையை ஏற்படுத்திவிடும் எனவே இதற்கு நாங்கள் இடம்கொடுக்க கூடாது எமது ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன எனவே நாம் அதைநோக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம் .
தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு தேர்காலத்தில் கூறிய வாக்குறுதிகளை எதாவது செய்வார்களா என்றால் இதுவரை செய்யாதவர்கள் இனியும் செய்வார்களா என்றால் அதனை இல்லை என்றே கூறவேண்டும் .தேர்தலுக்காகக் கூறியவை தேர்தலுடனே சென்றுவிட்டது மாகாணசபை தேர்தல் விடயத்திலும் இதுவே காலத்திற்குகாலம் காலத்தை கடத்துகின்ற செயற்பாட்டையே இவர்கள் செய்துவருகிறார்கள் எனவே நாங்கள் தமிழ்தேசிய கட்சியாக ஒரே குடையின் கீழ் செயற்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகின்றோம் என்றார்.