தங்கத்தை திருட குழந்தையின் சடலத்தைத் தோண்டிய ​அவலம்

தனது தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்வதாகக் கூறி மயானத்திற்குள் நுழைந்து, புதைக்கப்பட்டிருந்த மூன்று மாதக் குழந்தையின் சடலத்தைத் தோண்டி, அதிலிருந்த தங்க நகைகளைத் திருட முயன்ற நபரைத் தேடி ஹோமாகம தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

ஹோமாகம, நியதகல பொது மயானத்திற்கு புதன்கிழமை (11) மாலை வந்த சந்தேக நபர் அங்கிருந்த மின்மயானக் காப்பாளரைச் சந்தித்துள்ளார். தனது தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்யப் போவதாகக் கூறி மயானத்திற்குள் செல்ல அனுமதி பெற்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் அந்த நபர் மயானத்தை விட்டு வெளியேறாததால் சந்தேகமடைந்த காப்பாளர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு கல்லறை தோண்டப்பட்டு, சடலத்தை வெளியே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதை அவர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக ஹோமாகம பிரதேச சபை அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டபோது, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தையின் கல்லறையே இவ்வாறு தோண்டப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

குழந்தையின் உடலில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையிடும் நோக்கிலேயே இந்தச் செயல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய ஹோமாகம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

sis

பாடசாலை பேருந்து சேவைக்கு மேலும் 200 பேருந்துகள்

March 12, 2026

சிசு செரிய பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை

anu

ஜனாதிபதி – இலங்கை மின்சார சபை தொழிற் சங்கங்கள் சந்திப்பு

March 12, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (12) முற்பகல்

s

மீட்கப்பட்ட படகில் 10 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்!

March 12, 2026

இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரூபாய் என

ki

கனடா – ஹமில்டன் பகுதியில் ‘பியர் ஸ்ப்ரே’ பாவித்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொள்ளும் குற்றங்கள் அதிகரிக்கின்றன?

March 12, 2026

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய பியர் ஸ்ப்ரே (Bear Spray) சம்பவங்கள் — குறிப்பாக தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற

drug

ஒரே நாளில் 937 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

March 12, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று புதன்கிழமை

car

கனேடிய பிரதமர் மார்க் கார்னி நேட்டோ போர் பயிற்சிக்கு விஜயம்!

March 12, 2026

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இன்று வியாழக்கிழமை கூட்டணி நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம்

ve

இராணுவ வீரர் வீட்டில் வெடிபொருட்கள்,சீருடைகள்?

March 12, 2026

பொலன்னறுவை மாநில புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, ஹிங்குராக்கொட பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட

a

முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

March 12, 2026

ஹட்டன் – டயகம பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில்

in

மல்லாவியில் பாம்பு தீண்டி வருமானப் பரிசோதகர் மரணம்

March 12, 2026

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (11) மாலை உயிரிழந்துள்ளார். துணுக்காய் பகுதியைச் சேர்ந்த

2

தூதுவர்களின் நியமனங்களுக்கு அங்கீகாரம்

March 12, 2026

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின்

arre

தங்கத்தை திருட குழந்தையின் சடலத்தைத் தோண்டிய ​அவலம்

March 12, 2026

தனது தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்வதாகக் கூறி மயானத்திற்குள் நுழைந்து, புதைக்கப்பட்டிருந்த மூன்று மாதக் குழந்தையின் சடலத்தைத் தோண்டி, அதிலிருந்த

d

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு போதைப்பொருட்கள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகள் கொண்டுவரப்பட்டன!

March 12, 2026

நாட்டின் தெற்கு கடற்பரப்பில், போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த படகுகளில் சுமார்