பொதுப் போக்குவரத்துச் சேவைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் பெரும்பாலும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்ப்பதாக போக்குவரத்துக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
100 சதவீதம் மீளமைப்பு சவாலானதாக இருந்தாலும், ஆண்டின் இறுதிக்குள் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து சேவைகளை இந்த மாத இறுதிக்குள் சிலாபம் வரை மீண்டும் தொடங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சிலாபம் சாலைக்கு விஜயம் செய்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்தைத் துண்டித்த இரணைவில் பாலம் முழுமையாக அழிந்ததைப் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் அந்த இடத்தில் ஒரு பெய்லிப் பாலத்தை அமைக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டு்ள்ளார்.