யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், 110/2 திருவையாறு, Cergy-Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லம்மா (மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
உசானந்தன் (உசன்), தீபா, உதயா, சேர்ஜிகா (சேகா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோமளாயினி (ஜெனி), உஷானந்தன்(நந்தா), ஆதவன்(ரூபன்), ஆந்திரயாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுவன், மீரா, லீனா, வித்தியா, ரமணி, நிலா, இளங்கோ, எழிலன், வேலோன், அலெக்சாண்டர்- சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் (சுவாமிநாதன்)- வள்ளியம்மை (இலங்கை), காலஞ்சென்றவர்களான நவரத்தினம்- சபாரத்தினம் மற்றும் காலஞ்சென்ற அருளானந்தம்- விமலராணி (பிரான்ஸ்), ஐயம்பெருமாள் (கனடா)- காலஞ்சென்ற தனலெட்சுமி, காலஞ்சென்ற விமலாதேவி – பாலச்சந்திரன் (கனடா), காலஞ்சென்ற நடேசப்பிள்ளை- கலாரஞ்சினி (கனடா), பரமேஸ்வரி (ராசாத்தி- கனடா)- குமாரசாமி(கனடா), சாரதா (செல்லம்- இலங்கை)- காலஞ்சென்ற குணரத்தினம், குமணன் – கலாநிதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளம்பலம் (பிரித்தானியா) – காலஞ்சென்ற ஞானசௌந்தரி, காலஞ்சென்ற தம்பிமுத்து – காலஞ்சென்ற மகேஸ்வரி/ யோகம்மா (அவுஸ்திரேலியா) மற்றும் காலஞ்சென்ற மார்கண்டு- மனோரமா (இலங்கை), காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை- ஞானவதி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி- இரத்தினம், மங்கையற்கரசி- குலேந்திரதாசன் (இலங்கை), காலஞ்சென்ற சண்முகரத்தினம்- திலகவதி (இலங்கை), சரவணபவன் (மாணிக்கம்)- பத்மாதேவி (பிரான்ஸ்), தர்மரத்தினம்- தியாகராணி (பிரான்ஸ்), லோகநாதன்- மனோரஞ்சி (இலங்கை), கோகுலகௌரி- உதயகுலசிங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.