இசைப்பிரியா கொலையில் கோட்டாவின் மூளையாகச் செயல்பட்டவருக்கு தொடர்பு!

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா அவ்வாறு தெரிவித்துள்ளார். பொன்சேகா மேலும் தெரிவிக்கையில்,

கோத்தாபயவின் மூளையாகச் செயற்பட்ட கபில ஹெந்தவிதாரண

இறுதிப்போரின்போது 2 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சரணடைந்தனர். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும் மக்களுடன் மக்களாகச் சரணடைந்தனர்.

அவர்களுக்குத் தேவையான உடை உணவு, மருந்து என்பவற்றை வழங்கி, புனர்வாழ்வில் இருந்து செல்லும் வரை அனைவரையும் முறைப்படி பாதுகாத்தோம். எனினும், இறுதிப்போரின் போது இடம்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் இன்றளவும் பெரும் சர்ச்சைகள் நிலவுகின்றன.

அவற்றில் ஒன்று இசைப்பிரியாவின் படுகொலை. இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப் பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று உறுதியாகக் கூறுகின்றேன்.

இந்த விடயம் தொடர்பில் தீர்க்கமான விசாரணைகள் இடம்பெற வேண்டும். அத்துடன், சரணடைந்த சிலரைக் கொலைசெய்த குற்றச்சாட்டு ஜகத் ஜயசூரிய மீதும் காணப்படுகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நான் இராணுவ விசாரணைகளைக்கூட முன்னெடுத்தேன். விசாரணைகள் இடம்பெறும்போது. இடைநடுவில் நான் பதவி நீக்கப்பட்டு ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது, ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் மஹிந்தவிடம் தெரிவித்தேன்.

எனினும் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை. இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேசத்தில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால், சர்வதேச கண்காணிப்பாளர்களின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.

அப்படிச் செய்யும் பட்சத்தில் எமது விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடன் அமையும். முறையான சாட்சிகள் இருக்குமாக இருந்தால் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இராணுவப் பிரதானியாக இருந்த கபில ஹெந்தவிதாரண பின்னர் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகச் செயற்பட்டார்.

அதேவேளை கபில ஹெந்தவிதாரண , முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் மூளையாகச் செயற்பட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image Modified – Gemini AI

dac

ஒன்டாரியோ அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கக்கு புதிய திட்டம்

March 12, 2026

ஒன்டாரியோ அரசு, ஆரம்பப்பள்ளி வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் வகுப்பறை உபகரணங்களை வாங்குவதற்காக நேரடியாக $750 நிதியை வழங்கும் வகுப்பறை

un

ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி

March 12, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய போர் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படாமல்

oil

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

March 12, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில்

lep

எலி காய்ச்சலால்: 1,800 பேர் பாதிப்பு!

March 12, 2026

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார

ma

நிபந்தனைகளுடன் போரை முடிக்க தயார் – ஈரான்

March 12, 2026

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல்,

arrest

நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் மரையை வேட்டையாடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

March 12, 2026

ஹட்டன் வனப்பகுதிக்குச் சொந்தமான நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் கம்பி பொறியைப் பயன்படுத்தி மரை ஒன்றினை வேட்டையாடி அதிக விலைக்கு

tru

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ மிகப்பெரிய வெற்றி

March 12, 2026

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று

ham

 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் : 2 இந்தியர்கள் பலி?

March 12, 2026

ஹார்மூஸ் நீரிணையில் தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் 2

Air ind

போர் காரண​மாக விமான கட்டணம் அதிகரிப்பு?

March 12, 2026

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரண​மாக, விமான எரிபொருள் விலை அதி​கரித்​துள்​ள​தால், ஏர் இந்​தியா நிறு​வனம் விமானக் கட்​ட​ணங்​களை

ir

பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறு – இராணுவ விசாரணை

March 12, 2026

ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பாடசாலையில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும், இதில் 175 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்,

mod

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை தவிக்க விடுவதில்லை

March 12, 2026

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு

mal

அமெரிக்க தூதுவராக பீட்டர் மண்டல்சன் நியமனம்

March 12, 2026

அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதுவராக பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson) நியமிக்கப்பட்டது தொடர்பான முதல் கட்ட அதிகார பூர்வ ஆவணங்களை ஐக்கிய